Saturday, November 5, 2016

நான் ரசிக்கும் பாடல் : பாவ மன்னிப்பு

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடல் : எல்லோரும் கொண்டாடுவோம்


பாடல் வரிகள் :




பாடல் வரிகள் : 

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் 
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி (2)





கல்லாகப் படுத்திருந்து
கழிந்தவர் யாருமில்லே (2)
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபம் இல்லே (2)
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)
நூறு வகைப் பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
ஆ..
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னையென்போம்
முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோரும்)
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?
ஓ..

படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான் (2)
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான் (2)
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

No comments:

Post a Comment