Wednesday, November 2, 2016

ரசித்தப் பாடல் :




பாடல்: செந்தமிழ்த் தேன் மொழியாள்
திரைப்படம்: மாலையிட்ட மங்கை
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1958


பாடல் வரிகள் : 


சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

No comments:

Post a Comment