Tuesday, December 13, 2016

ரசிப்பதற்காக : ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்


(விவசாயியின் பெருமையினை சொல்லிடும் பாடல்)



திரைப்படம்: பழனி பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண்டு: 1965





ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு சேராத செல்வம் இன்று சேராதோ? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ? ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா நாணம் என்ன சொல்லம்மா அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா திருமண நாளம்மா போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள் தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது? போர் செய்யும் வீரன் ஏது? போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம்