Tuesday, December 13, 2016

ரசிப்பதற்காக : ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்


(விவசாயியின் பெருமையினை சொல்லிடும் பாடல்)



திரைப்படம்: பழனி பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண்டு: 1965





ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு சேராத செல்வம் இன்று சேராதோ? தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ? ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா நாணம் என்ன சொல்லம்மா அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா திருமண நாளம்மா போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள் தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது? போர் செய்யும் வீரன் ஏது? போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும் போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை ஊரோடும் சேர்ந்துண்ணலாம்


Tuesday, November 29, 2016

இது தான் வாழ்க்கை!


பிரிவுகளில்லாத
வாழ்க்கையேது?
இழப்புகளில்லாத
வாழ்க்கையேது??
துயரங்களில்லாத
வாழ்க்கையேது??
கண்ணீரில்லாத
வாழ்க்கையேது??
அன்பும் நட்பும்
பிரிவும் இழப்பும்
எல்லாம் உண்டு
வாழ்க்கையினில்!!
இனிப்பும் உண்டு
காரமும் உண்டு
வாழ்வெனும் சுவையினில்!!
இனிப்பை ரசித்திடும்
மனிதா
சிரிப்பை விரும்பிடும்
மனிதா
கண்ணீரையும் ஏற்றுக்கொள்
கவலையையும் ஏற்றுக்கொள்!!
வாழ்வினில்
துன்பங்கள் எல்லாம்
உனக்கு கீழே
தெரியுமடா!!!!

விரைவில் தமிழீழம் மலரும்

தமிழீழ மண்ணுக்காய்
வீழ்ந்த விழுந்த
விதைகளின் தியாகம்
வீண் போகவில்லை!!!



தடைக ளிருந்தாலும்
மறவோம்
எம்மாவீரரை பூஜிக்க

மாவீரர்களின்
கல்லறை நிலத்தை
தூய்மையாக்கினோம் இன்று
விரைவில்
தமிழீழத்தில்
களைகள் அகற்றுவோம்!!!!!















அடக்கு முறைகளும்
சர்வாதிகாரமும்
துப்பாக்கி முனைகளும்
அடக்கிடாது எங்களின்
உணர்வுகளை
என்று உலகிற்கு
மீண்டும் ஒருமுறை
நிரூபித்த்திட்ட
எம்ஈழ உறவுகளின்
பாதந் தொட்டு வணங்குகின்றேன்
தமிழனாக

                      
தமிழீழ மண்ணில்
மக்கள் மட்டுமல்ல
இயற்கையும்
எம் மாவீரர்களுக்கு
கண்ணீர் சிந்தியது!!
                                   

விழுந்தவர்கள்
எழும் நேரம் இனி
விதையாகியவர்கள்
விருட்சமாக மாறிடும் நேரம் இனி!!!!

Wednesday, November 23, 2016

பழைய பட குத்தாட்டம் : சித்தாடை கட்டிக்கிட்டு


படம் : வண்ணக்கிளி
வெளிவந்த ஆண்டு : 1959
பாடல் எழுதியவர் : மருதகாசி
இசை : கே.வி.மகாதேவன்
பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலா
இயக்கம் : டி. ஆர். ரகுநாத்


இயக்குனர்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புபிரேம்நசீர்
டி. ஆர். ராமச்சந்திரன்
மனோகர்[1]
டி. பாலசுப்பிரமணியன்
டி. ஆர். நடராஜன்
பி. எஸ். சரோஜா[1]
மைனாவதி
முத்துலட்சுமி
எம். சரோஜா
சி. எல். சரஸ்வதி





பாடல் வரிகள் :

சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்


ஆடியோ கேட்பதற்கு :::

 
 



Saturday, November 5, 2016

நான் ரசிக்கும் பாடல் : பாவ மன்னிப்பு

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
பாடல் : எல்லோரும் கொண்டாடுவோம்


பாடல் வரிகள் :




பாடல் வரிகள் : 

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம் 
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி (2)





கல்லாகப் படுத்திருந்து
கழிந்தவர் யாருமில்லே (2)
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபம் இல்லே (2)
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)
நூறு வகைப் பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
ஆ..
கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே (2)
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னையென்போம்
முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோரும்)
ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?
ஓ..

படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான் (2)
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான் (2)
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம் (2)
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

Wednesday, November 2, 2016

ரசித்தப் பாடல் :




திரைப்படம்: கைகொடுத்த தெய்வம்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ 
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம் 
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ரசித்த பாடல் : நீங்க மட்டும் இல்லாதிருந்தால்




ஏசய்யா உன் அன்பு போதுமே
என்  நேசரே உங்க கிருபை போதுமே!!1